HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இன்றும் சாட்சி விசாரணை

HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இன்றும் சாட்சி விசாரணை

HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இன்றும் சாட்சி விசாரணை

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2015 | 9:42 am

கொழும்பில் HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு இன்றும் மாணவர்களிடம் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நேற்று மாணவரொருவரிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரெ கூறினார் .

குறித்த மாணவரை தவிர மேலும் சில மாணவர்கள் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவியொருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு முன் உயர் தேசிய வணிகவியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்தாரைப் மற்றும் தடியடி பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்