HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் ஆணைக்குழுவினால் மாணவர்களிடம் சாட்சியங்கள் பதிவு

HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் ஆணைக்குழுவினால் மாணவர்களிடம் சாட்சியங்கள் பதிவு

HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டம்: பொலிஸ் ஆணைக்குழுவினால் மாணவர்களிடம் சாட்சியங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 12:46 pm

கொழும்பில் HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு இன்று (03) சாட்சி விசாரணகைளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்வதற்காக 2 மாணவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரெ கூறினார் .

இதேவேளை தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி கொழும்பு வோட் பிரதேசத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன் இடம் பெற்ற HNDA மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு உயர் அழுத்த நீர்தாரைகள் ,கண்ணீர் புகை மற்றும் தடி அடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு அமைவாக வாக்கு மூலம் பெறுவதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட்ட ஆகியோர் நேற்று (02) முற்பகல் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்