விசேட குழு மூலம் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்: யாழில் நீதியமைச்சர்

விசேட குழு மூலம் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்: யாழில் நீதியமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 9:28 pm

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ்.மாவட்டத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்தார்.

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு சென்ற நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் வரவேற்றார்.

நீதியமைச்சருக்கும் யாழ்.மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, நீதியமைச்சர் தெரிவித்ததாவது;

[quote]சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட குழுவொன்றை அமைத்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புபடாதவர்கள், நம்பகத்தன்மைவாய்ந்த ஆதாரங்கள் இல்லாதவர்கள், பிணை வழங்குவதற்கான சாத்தியம் தென்படுபவர்களுக்கு பிணை வழங்குவதற்கு நாம் இணங்கியுள்ளோம். மேல்நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளை காலதாமதமின்றி விரைவில் விசாரிப்பதற்கான புதிய நீதிமன்றக் கட்டமைப்பொன்றை அமைத்து விசாரணைகளை துரிதப்படுத்தவுள்ளோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்