வசந்த சொய்சா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

வசந்த சொய்சா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

வசந்த சொய்சா கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 8:21 am

கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலையின் பிரதான சந்தேகநபரான எஸ் எப் லொக்கா எனப்படும் இரோஷன் ரணசிங்க இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற லொறியின் சாரதி நேற்று (02) மாலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டார்

எஸ் எப் லொக்காவை தடுத்துவைக்கும் உத்தரவின் கீழ் விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

பிரதான சந்தேகநபர் சிலாபம் பகுதியில் மறைந்து வாழ்வதற்கு அனுசரணை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான சீதுவை பிரதேச பெண் மற்றும் அனுராதபுரத்தை சேர்ந்த நபரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக தடுத்துவைக்கும் உத்தரவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்ட கடற்படையின் நீச்சல் வீரர் மற்றும் எஸ் எப் லொக்காவின் சதோரரரும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான பிரபல கராத்தே வீரரான வசந்த சொய்சா கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அவரது களியாட்ட விடுதியில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதன் போது குறித்த விடுதியின் முகாமையாளர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்