லாகூர் நோக்கிச் சென்ற விமானத்தின் சக்கரங்கள் வெடித்ததில் 10 பேர் காயம்

லாகூர் நோக்கிச் சென்ற விமானத்தின் சக்கரங்கள் வெடித்ததில் 10 பேர் காயம்

லாகூர் நோக்கிச் சென்ற விமானத்தின் சக்கரங்கள் வெடித்ததில் 10 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 3:52 pm

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாஹூர் நோக்கி 120 பயணிகளுடன் சென்ற தனியார் விமானம் ஒன்று அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் சக்கரங்கள் வெடித்ததில் 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அவசர வாசல் வழியாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து, விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்புப் பணியை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், அந்த பகுதியின் ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 10 பயணிகளுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தால் லண்டன், பாரீஸ், மிலன் மற்றும் இஸ்லாமபாத் செல்லும் விமானங்கள் தாமதமடைந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்