மாகாண சபை உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது

மாகாண சபை உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது

மாகாண சபை உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 10:33 pm

மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் ஜனநாயகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மாகாண சபை உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக்க தயாரத்ன, தென் மாகாண சபை உறுப்பினர் பத்மசிறி டி சில்வா மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஹாமி ரத்நாயக்க ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் எஸ்.எச்.மடவல ஆகியோர் அங்கம் வகித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்றிருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்ததால் ஜனநாயகக் கட்சியிலிருந்து குறித்த மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தை ஆட்சேபித்து குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் கட்சியின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்