நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 12:52 pm

நாட்டில் தொடரும் மழையுடனான காலனிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழையுடனான வானிலையால் கொக்கட்டி சோலை மற்றும் வவுனதீவு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக இந்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பகுதியில் வயல் நிலங்களும் நீரிழ் மூழ்கியுள்ளன.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் மேலும் சில வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியம் உள்ளதால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் தெதுரு ஒய நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் புத்தளம் மாவட்டத்தில் தொடரச்சியாக மழை பெய்துவருவதால் தெதுரு ஓய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயும் மட்டத்தை அண்மித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்