நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: 6 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு: 6 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 5:48 pm

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு நாராஹேன்பிட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேலதிக நீதவான் நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் இன்றைய வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது சந்தேகநபர்களில் ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக இதன்போது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் மூன்று கடற்படை சிப்பாய்களும். இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், சிவில் நபர் ஒருவரும் அடங்குகின்றனர்.

எஞ்சிய மூன்று சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் தினத்தன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு இம்மாதம் 22 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்