தாய்லாந்தில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளார்

தாய்லாந்தில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளார்

தாய்லாந்தில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி இன்று கலந்துகொள்ளவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 8:00 am

தாய்லாந்திற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன் போது இரு நாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவிலானோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்

இரு நாடுகளிலும் முதலீடு செய்வதற்கு ஏற்ற துறைகள் தொடர்பில் தாய்லாந்து மற்றும் இலங்கை முதலீட்டாளர்களால் இதன் போது ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிரேஷ்டப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன் சர்வதேச பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து இதன் போது ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிரேஷ்டப் பணிப்பாளர் கூறினார்.

ஜனாதிபதி தனது 4 நாள் விஜயத்தை நிறைவு செய்து நாளை நாடு திரும்பவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்