டிக்கோயாவில் ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்வு

டிக்கோயாவில் ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்வு

டிக்கோயாவில் ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 8:36 am

ஹட்டன் – டிக்கோயாவில் பாத்போட் தோட்டத்தில் நேற்று (02) ஏற்பட்ட மண்சரிவில் 5 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

டிக்கோயா பகுதியில் தொடரும் மழை காரணமாக டிக்கோயா பாத்போட் தோட்டத்தில் நேற்று (02) இரவு மண்சரிவு ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதுடன் 5 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கபட்ட 5 குடும்பங்களை சேர்ந்தவர்களும் பாத்போட் தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்