கிராபிக்ஸ் காட்சிகளுடன் புதுமையாக வெளியாகவுள்ள விஜயின் அடுத்த பாடல்

கிராபிக்ஸ் காட்சிகளுடன் புதுமையாக வெளியாகவுள்ள விஜயின் அடுத்த பாடல்

கிராபிக்ஸ் காட்சிகளுடன் புதுமையாக வெளியாகவுள்ள விஜயின் அடுத்த பாடல்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 12:03 pm

விஜய் பாடியிருக்கும் ‘செல்லாக்குட்டி’ பாடலை கிராபிக்ஸ் காட்சிகள் மூலமாக மிகவும் புதுமையாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் அட்லீ.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு செல்லவிருக்கிறது.

இப்படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் விஜய் 2 பாடல்களை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதில் ஒரு பாடலை கடந்த வாரம் பாடி முடித்துவிட்டார். இப்பாடல் விஜய் – சமந்தா இருவருக்கும் இடையே வரும் காதல் படலாகும்.

”ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என் செல்லக்குட்டியே” என்று தொடங்கும் அப்பாடலை ஏற்கனவே வேறு ஒருவரை பாட வைத்து படக்குழுவிடம் கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ். அதை வைத்து அட்லீயும் அப்பாடலை படமாக்கி விட்டார்கள். அப்பாடல் காட்சிகள் முழுவதுமே கிராபிக்ஸ் காட்சிகளால் மெருக்கூட்டி இருக்கிறாராம் அட்லீ.

அப்பாடலுக்காக அட்லீயின் காட்சியமைப்பைப் பார்த்து மிகவும் பாராட்டி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த பாடல், ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதுமையாகவும் ரசிக்கும்படியும் இருக்கும் என்கிறது படக்குழு.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்