ஓய்வு பெற்றுவிட்டால் பேட்டை எடுக்கக் கூடாது என்றில்லை: இயன் சாப்பலுக்கு சச்சின் பதில்

ஓய்வு பெற்றுவிட்டால் பேட்டை எடுக்கக் கூடாது என்றில்லை: இயன் சாப்பலுக்கு சச்சின் பதில்

ஓய்வு பெற்றுவிட்டால் பேட்டை எடுக்கக் கூடாது என்றில்லை: இயன் சாப்பலுக்கு சச்சின் பதில்

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 4:45 pm

அமெரிக்காவில் நடைபெறவுள்ள Cricket All Stars T20 போட்டித் தொடர் குறித்து இயன் சாப்பல் கூறிய கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

நியூயார்க்கில் நடைபெறவுள்ள T20 காட்சிப் போட்டிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் ஆடுவதை மக்கள் ஒருபோதும் பார்க்க விரும்ப மாட்டார்கள் என இயன் சாப்பல் கூறியிருந்தார்.

சச்சின் டெண்டுல்கரிடம் இதுபற்றி வினவியபோது,

[quote]அனைவரும் எப்போதும் ஏதாவது கருத்துடனேயே இருப்பார்கள், ஆனால் அந்தக் கருத்து சரியானதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. கிரிக்கெட்டில் ஒரு கட்டத்தில் உயர்ந்த மட்டத்தில் சவாலாக இனித் திகழ முடியாது என்ற நிலை ஏற்படும் போது ஓய்வை அறிவிக்கின்றோம். அதற்காக கிரிக்கெட் மீதான ஆர்வத்தை நிறுத்தி விடுகின்றோம் என்று அர்த்தமல்ல. ஒருமுறை ஓய்வு பெற்றுவிட்டால் மறுபடியும் பேட்டை எடுக்கக் கூடாது என்று எதுவுமில்லை [/quote]

என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்