ஒரு நாள் சம்பளம், தீபாவளி முற்கொடுப்பனவை அதிகரிக்கக்கோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

ஒரு நாள் சம்பளம், தீபாவளி முற்கொடுப்பனவை அதிகரிக்கக்கோரி மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

03 Nov, 2015 | 9:52 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபாவாகவும் தீபாவளி முற்கொடுப்பனவை 15,000 ரூபாவாகவும் அதிகரிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தின் சில பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தீபாவளி முற்பணம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கக்கோரி பொகவந்தலாவ கிளார்னி, மோரா, தெரேசியா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்