ஊருகஸ்மங்ஹன்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

ஊருகஸ்மங்ஹன்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

ஊருகஸ்மங்ஹன்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 1:14 pm

காலி ஊருகஸ்மங்ஹன்திய ரன்தொடுவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் ஊருகஹ,ஹபருகல வீதியில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

அதே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 20 மற்றும் 25 வயதுடைய 2 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்