அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கைக்கு துயில் வாதமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிப்பு

அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கைக்கு துயில் வாதமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிப்பு

அதிகரித்து வரும் ஆவிகள் மீதான நம்பிக்கைக்கு துயில் வாதமே காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2015 | 11:10 am

அமெரிக்காவின் ப்யூ ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி ஐந்தில் ஒரு அமெரிக்க குடிமக்கள் ஆவிகளை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த அமெரிக்கர்களில் 18% மானோர் தாம் நேரில் ஆவிகளை பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 13% மானோர் இறந்துபோனவர்களைப் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

இது கடந்த 1996 ஆம் ஆண்டு 9% ஆக இருந்தது. மொத்த மக்கள் தொகையில் 26% ஆண்களும், 33% பெண்களும் அமானுஷ்யமான அனுபவங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை ஆய்வு செய்த கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக ஆய்வாளர் மருத்துவர் அலைஸ் கிரிகோரி, ‘மக்கள் இதுபோன்ற அனுபவங்களுக்கு உள்ளாவதற்கு துயில் வாதம் (sleep paralysis) என்ற பிரச்சினை காரணமாக இருக்கலாம். இந்த பாதிப்பால், மாயத்தோற்றம் (Hallucination) தோன்றுகிறது. அதுவே, அமானுஷ்ய அனுபவமாக கருதப்படுகின்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்