2015 வீ விருதுகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

2015 வீ விருதுகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

2015 வீ விருதுகளுக்காக இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 5:44 pm

தன்னலமற்ற சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் 2015 வீ விருது வழங்கும் நிகழ்வு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று எம்.ரீ.வி, எம்.பீ.சி தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (UNDP) ஐக்கிய நாடுகள் தன்னார்வ தொண்டர்கள் (UNV), கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம்,சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சை சேர்ந்த பிரமுகர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

தன்னார்வ தொண்டர்களுக்கான சர்வதேச வருடத்தின், 10 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையிலும் இலங்கை முழுவதிலும் தன்னார்வ தொண்டர்களின் சுயநலமற்ற சேவையை கௌரவிக்கும் வகையிலும் தன்னார்வ தொண்டுக்கான தேசிய செயற்பாட்டு குழு, இலங்கை UNV மற்றும் நியூஸ்பெஸ்ட்டின் இணைந்த முயற்சியாக 2011 ஆம் ஆண்டு இந்த வீ விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டிற்கான வீ விருதுகள் ‘அனர்த்த இடர் குறைப்புக்காக தொண்டாற்றல்’ எனும் சிறப்பு கருப்பொருளுடன் இடம்பெறவுள்ளது.

மேலும் ‘சிறப்பு தன்னார்வ தொண்டர்’ மற்றும் ‘வருடத்தின் இளம் தன்னார்வ தொண்டர்’ ஆகிய விருதுகளுடன் தொடர்புடையதாக 2015 வீ விருது வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் தன்னார்வ தொண்டர்களின் நிறைவேற்று ஒருங்கிணைப்பாளரின் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த விருதிற்கான விண்ணப்பங்களை 2015 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி வரை, V- விருதுகள் செயலகம்,c/o UNV 202- 204,பௌத்தாலோக்க மாவத்தை,கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

மேலதி விபரங்களை 0716556556 எனும் தொலைப்பேசி இலக்கத்தினூடாகவோ, [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியூடாகவோ அல்லது www.unv.lk என்ற இணையத்தள முகவரியூடாகவோ அறிந்துகொள்ள முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்