மாலைதீவு ஜனாதிபதியின் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் தெஹிவளையில் கைது

மாலைதீவு ஜனாதிபதியின் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் தெஹிவளையில் கைது

மாலைதீவு ஜனாதிபதியின் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் தெஹிவளையில் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 1:04 pm

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமின் கயூமின் கொலை முயற்சியுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் தெஹிவளை நெதிமால பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் உதவியுடன் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

விசா சட்டங்களை மீறி நாட்டில் ஒருவர் தங்கியிருப்பதாக மாலைதீவு தூதரகம் அறிவித்ததை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்‌ஷான் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் இலங்கையிலுள்ள மாலைதீவு தூதரகத்தில் பொறுப்பளிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று முற்பகல் சந்தேகநபர் மாலைத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்