மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில்  மூவரடங்கிய குழு விசாரணை

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் மூவரடங்கிய குழு விசாரணை

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் மூவரடங்கிய குழு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 7:40 pm

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்களின் ஆர்பாட்டம் அரசியல் தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றென பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கான பொலிசாரின் நடவடிக்கைகள் தொடர்பில் மூவரடங்கிய சுயாதீனான குழு விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாதிபர் காமினி மதுரட ஆகியோர் இன்று பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாச குரே தெரவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்