பிணையில் விடுவிக்கப்பட்ட உபாலி கொடிகார மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

பிணையில் விடுவிக்கப்பட்ட உபாலி கொடிகார மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

பிணையில் விடுவிக்கப்பட்ட உபாலி கொடிகார மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 8:00 pm

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார இன்று (02) மீண்டும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 16 ஆம் திகதி பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை குறித்து இந்த வழக்கு இடம்பெறுகின்றது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அமைச்சு பதவியில் இருந்த போது அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி ஹோட்டல் ஒன்றில் தங்கியமை தொடர்பிலான சம்வத்திற்கே இன்று இவர் ஆஜராகியிருந்தார்.

வெளிநாடு செல்வதற்காக நீதிமன்ற பொறுப்பில் உள்ள தனது கடவுச்சீட்டை விடுவிக்குமாறு இதன் போது ரோஹித போகொல்லாகம கோரியிருந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்