ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 1:18 pm

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமரை சந்தித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பியுன் ஷான் ஓஷாவை இன்று காலை சந்தித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பதாக இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், அரசியல், கலாசாரம் மற்றும் மத ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் தாய்லாந்து பிரதமரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதும் இந்த விஜயத்தின் நோக்கம் என தாய்லாந்து தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று தாய்லாந்தை சென்றடைந்த ஜனாதிபதி நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்