சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

சேயா சதெவ்மி கொலைச் சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 4:31 pm

சிறுமி சேயா சதெவ்மியின் கொலையின் சந்தேகநபரான சமன் ஜெயலத் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மினுவன்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று (02) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய வாக்குமூலத்தின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த வாக்குமூலத்தின் பிரதியை வழங்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்