சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 8:59 am

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் யோசனை முன்வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான யோசனைகள் சட்ட மாஅதிபர் யுவன்ஜன விஜேயதிலகவினால் பிரதம நீதியரசருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவினாலும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுவர் நீதிமன்றத்திற்காக பிரதம நீதியரசரால் எதிர்காலத்தில் நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

கொழும்பில் அமைக்கப்படவுள்ள சிறுவர் நீதிமன்றத்தினூடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விரைவில் விசாரிக்க முடியும் எனவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியகத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கமைய அந்த பணியகத்திற்கு தேவையான உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனூடாக சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கும் அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கும் சிறந்த சந்தர்பம் ஏற்படுத்தப்படும் எனவும் சட்ட மாஅதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,000 இற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்