சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 10:04 am

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி மதுரட்ட ஆகியோர் இன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி கொழும்பு வோட் ப்ளேசில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

விசாரணையின் போது பொலிஸ் அதிகாரிகள் எவரேனும் தவறிழைத்திருப்பின் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகேயின் ஆலோசனைக்கு அமைய விசாரணை நடைபெறுவதாக ஆணைக்குழுவின் செயலாளர் குரே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற விதத்தினை வெளிப்படுத்தும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவந்த காட்சிகள், புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு விசாரணை இடம்பெறவுள்ளது.

இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக இன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்