சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி அபோட்ஸ்லி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி அபோட்ஸ்லி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி அபோட்ஸ்லி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 7:26 pm

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்குமாறும் தீபாவளி முற்கொடுப்பணவை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறும் வலியுறுத்தி ஹட்டன் அபோட்ஸ்லி தோட்டத்தில் மக்கள் இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அபோட்ஸ்லி தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பதாதைகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

தேர்தல் காலத்தில் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத் தருவதாக தெரிவித்த அரசியல்வாதிகள் தற்போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அபோட்ஸ்லி தோட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும் தீபாவளி பண்டிகை முற்கொடுப்பணவை 15,000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தேர்தல் மேடையில் கூறியிருந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்