கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் இதுவரை 28 பேர் கைது

கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் இதுவரை 28 பேர் கைது

கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் இதுவரை 28 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 12:10 pm

கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் இதுவரை 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அநுராதபுரம் மேலதிக நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய எஸ்.எப்.லொக்காவின் சகோதரர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த சொய்ஸாவின் கொலைச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் முதித்தா மாவத்தையில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 24 ஆம் திகதி இரவு வசந்த சொய்ஸா கொலை செய்யப்பட்டிருந்ததுடன் இதன் போது ஏற்பட்ட மோதலில் இரவு விடுதியின் முகாமையாளர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்