இன்று முதல் கொழும்பின் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கத் தடை

இன்று முதல் கொழும்பின் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கத் தடை

இன்று முதல் கொழும்பின் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கத் தடை

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 8:14 am

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விதிக்கு முரணான வகையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் முச்சந்திகளில் வாகனங்களை
முந்திச் செல்லுதல் என்பன இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு நகர், வத்தளை, வெலிக்கடை, தலங்கம, மிரிஹான, மஹரகம, பொரலஸ்கமுவ, கொஹூவளை, தெஹிவளை, பேலியகொடை, மற்றும் கிரிபத்கொடை ஆகிய நகரங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த பகுதிகளிலுள்ள வீதிகளின் இரு மருங்கிலும் அநாவசியமான முறையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் என் .கே. இளங்ககோனின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பொலிஸார் வழங்கும் அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்