கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 7:31 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றினூடாக இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பாரத பிரமதர் மோடிக்கு விடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்து கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தாம் வலியுறுத்தியதாகவும் தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால பிரச்சினையாக காணப்படும் மீனவர்களின் விவகாரத்திற்கு இந்திய அரசு நிரந்தர தீர்வு காணவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தப் பிரச்சினை தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் அடுத்த சில நாட்களில் விடுவித்துக் கொள்வதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்