பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2015 | 9:52 am

எச்.என்.டீ.ஏ மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் தலைப் பகுதியில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அவரை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரால் குறித்த மாணவியின் தலையில் மேற்கொள்ளப்பட்ட தடியடி தாக்குதல் காரணமாக அவருக்கு வேதனை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக குறித்த மாணவிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்து ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு முன் உயர் தேசிய வணிகவியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்தாரைப் மற்றும் தடியடி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன் போது தாக்குதலுக்கு இலக்கான குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் கடந்த 30 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வௌியேறியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்