பாடசாலை  சீருடைக்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும்

எழுத்தாளர் Staff writer

25 Nov, 2015 | 11:58 am

பாடசாலை மாணவர்களின் சீருடைகளை பெற்றுக் கொள்வதற்கான வவுச்சர்கள் இம் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது .

வயது எல்லையின் பிரகாரம் குறித்த வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம். பந்துசேன குறிப்பி்ட்டுள்ளார் .

அதிபர்களின் ஊடாக மாணவர்களுக்கு வழங்கப்படும் வவுசர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் .

நாடு முழுவதிலும் 42 இலட்சத்திற்கும் அதிகமான பாடசலை மாணவர்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார் .