ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடை

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடை

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடை

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2015 | 11:52 am

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பவர்களை நாளை (01) முதல் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன் பிரகாரம் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸார், ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி நாளை முதல் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்