நேபாளத்தின் முதல் பெண் அதிபரானார் பித்யாதேவி பண்டாரி

நேபாளத்தின் முதல் பெண் அதிபரானார் பித்யாதேவி பண்டாரி

நேபாளத்தின் முதல் பெண் அதிபரானார் பித்யாதேவி பண்டாரி

எழுத்தாளர் Bella Dalima

29 Oct, 2015 | 4:12 pm

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட, பித்யாதேவி பண்டாரி அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது.

பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஒரு மாதத்தில் அதிபருக்கான தேர்தல் இடம்பெற வேண்டும் என்பதால் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பித்யாதேவி பண்டாரியும், நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் குல்பகதூர் குருங் என்பவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

இதில் பித்யாதேவி பண்டாரி 327 வாக்குகள் பெற்று அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குல்பகதூர் குருங் 214 வாக்குகளைப் பெற்றார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கர்டி, நேபாளத்தின் புதிய அதிபராக பித்யாதேவி பண்டாரியைத் தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பித்யாதேவி பண்டாரி பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்