தனது பிறந்தநாளில் ட்விட்டர், பேஸ்புக்கில் இணைந்த ராகவா லாரன்ஸ்

தனது பிறந்தநாளில் ட்விட்டர், பேஸ்புக்கில் இணைந்த ராகவா லாரன்ஸ்

தனது பிறந்தநாளில் ட்விட்டர், பேஸ்புக்கில் இணைந்த ராகவா லாரன்ஸ்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2015 | 12:28 pm

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல முகங்கள் எடுத்த ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை அவர் படிப்பிக்கும் 400 குழந்தைகளுடன் இன்று அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் இன்று கொண்டாடினார்.

அதுமட்டுமில்லாமல், இதுவரை தனது பெயரில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணையாமல் இருந்த ராகவா லாரன்ஸ் இன்று, தனது பிறந்த நாளையொட்டி ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக இணையதளங்களிலும் இணைந்துள்ளார். லாரன்ஸ் பெயரில் சமீபத்தில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸ் தற்போது, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘ஒரே டிக்கெட்டுல ரெண்டு சினிமா’, ‘நாகா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல், தனது அறக்கட்டளை மூலம் பொதுமக்களுக்கு பல நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்