மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2015 | 1:54 pm

மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் இன்று (25) காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்