தொற்று நோய் தடுப்பு தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு

தொற்று நோய் தடுப்பு தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு

தொற்று நோய் தடுப்பு தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2015 | 10:23 am

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தொற்று நோய் தடுப்பு தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை குறித்து சர்வதேச ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட நிபுணர்களால் இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி குறித்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் அவர்கள் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவிக்கின்றார்.

இதேவேளை நாட்டில் முன்னெடுக்கப்படும் தொற்று நோய் தடுப்பு குறித்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட நிபுணர்களால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்