குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2015 | 10:57 am

குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தேசிய கல்வி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் குறித்து மாவட்ட ரீதியில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களது உதவியுடன் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் வட மாகாணத்தில் காணப்படும் பாடசாலைகள் மற்றும் யுத்த காலப்பகுதியில் அச்சுருத்தலுக்குள்ளான வட மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதேவேளை உயர்தர வகுப்புகள் அற்ற பாடசாலைகளில் உயர்தரம் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்