காராத்தே வீரர் வசந்த சொய்சா வெட்டிக் கொலை

காராத்தே வீரர் வசந்த சொய்சா வெட்டிக் கொலை

காராத்தே வீரர் வசந்த சொய்சா வெட்டிக் கொலை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2015 | 2:19 pm

காராத்தே வீர்ர் வசந்த சொய்சா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் முதித்தா மாவத்தையிலுள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்தை மூடியவாறு இரவுநேர களியாட்ட விடுதிக்கு சென்ற சுமார் 20 பேரால் நேற்றிரவு 11.45 அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலில் காயடைந்த இரவுநேர களியாட்ட விடுதியின் மூன்று பணியாளர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கராத்தே வீரர் வசந்த சொய்சாவின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்