காணாமற்போனோர் தொடர்பான அறிக்கை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்க நடவடிக்கை

காணாமற்போனோர் தொடர்பான அறிக்கை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்க நடவடிக்கை

காணாமற்போனோர் தொடர்பான அறிக்கை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2015 | 9:29 am

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எழுந்துள்ள பல்வேறுபட்ட பிரச்சனைகள் குறித்து பதில் வழங்குவதற்கு அந்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தபால் ஊடாகவோ அல்லது தொலைப்பேசி அழைப்பினூடாவோ ஆணைக்குழு தொடர்பான கேள்விகளை முன்வைக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் டப்ளியூ.எச் குணதாச தெரிவித்துள்ளார்.

மேலும் pcicpm @ slt. lk என்ற மின்அஞ்சல் வாயிலாகவும் வினாக்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரணகம அறிக்கை எனப்படும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முந்தினம் (23) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்யை www. pcicpm.lk என்ற ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் செயலாளர் டப்ளியூ.எச் குணதாச தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்