அளுத்கமயில் ஒருவர் சுட்டுக் கொலை

அளுத்கமயில் ஒருவர் சுட்டுக் கொலை

அளுத்கமயில் ஒருவர் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2015 | 1:06 pm

அளுத்கம கந்தவிகார வீதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் இன்று காலை 9.30 அளவில் வருகைதந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்க கூடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்