நாட்டு மக்களை சுகதேகிகளாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – ஜனாதிபதி

நாட்டு மக்களை சுகதேகிகளாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – ஜனாதிபதி

நாட்டு மக்களை சுகதேகிகளாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

24 Oct, 2015 | 6:52 pm

நாட்டு மக்களை சுகதேகிகளாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்

கொழும்பு ரோயல் கல்லூரியின் யுனெஸ்கோ கழகம் ஏற்பாடு செய்த ”இதயத்துடிப்பு 2015” நடை பயணம் இன்று தாமரைத்தடாக சுற்று வட்டத்திற்கு அருகில் ஆரம்பமாகியது.

சர்வமத தலைவர்களின் ஆசியுடன் இந்த நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி , பிரதமர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்