வெலே சுதாவின் சகோதரி ஹெரோயினுடன் கைது

வெலே சுதாவின் சகோதரி ஹெரோயினுடன் கைது

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 10:14 pm

வெலே சுதாவின் சகோதரி 10.5 கிராமுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பொரளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை, வலகே விளையாட்டரங்கு பகுதியில் நேற்று (20) மாலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார.

அவர் தற்போது பொரளை பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்