யாழில் சட்டவிரோத தொலைக்காட்சி அலைவரிசையை நடத்திச் சென்றவர் கைதாகி பிணையில் விடுதலை

யாழில் சட்டவிரோத தொலைக்காட்சி அலைவரிசையை நடத்திச் சென்றவர் கைதாகி பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 9:34 pm

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசையொன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். நகரில் சட்டவிரோதமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு ஒளிபரப்புக் கருவிகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (20) பறிமுதல் செய்தது.

குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசையை நடத்திச்சென்ற நபர் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறியுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அந்த தொலைக்காட்சி அலைவரிசை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னரே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்