மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட்: குசால் மென்டிஸ், டில்ருவன் பெரேரா தெரிவு

மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட்: குசால் மென்டிஸ், டில்ருவன் பெரேரா தெரிவு

மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட்: குசால் மென்டிஸ், டில்ருவன் பெரேரா தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 10:10 pm

மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குசால் மென்டிஸ், டில்ருவன் பெரேரா ஆகியோர் இடம்பெறுவார்கள் என இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் இன்று அறிவித்தார்.

இந்தப் போட்டியிலிருந்து லஹிரு திரிமான்ன, தரிந்து கௌஷால் ஆகியோர் நீக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக இரண்டு அணிகளின் வீரர்களும் இன்று இறுதிக்கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இரண்டாவது போட்டியில் இலங்கை அணியின் உபதலைவராக ரங்கன ஹேரத் செயற்படுவார் என இன்று அறியக்கிடைத்தது.

இதேவேளை, மேறகிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் பயிற்சியைக் காண முன்னாள் நட்சத்திர வீரரும், இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுநருமான சேர் காபில்ட் சோபர்ஸ் வருகை தந்திருந்தார்.

இதன்போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவரான க்ளைவ் லொயிட்டும் இணைந்துகொண்டிருந்தார்.

பந்தை வீசி எறிவதாக சந்தேகிக்கப்படும் மாலன் சமுவேல்ஸ் நாளை ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்