முரளியின் பந்துவீச்சை பயத்துடனேயே எதிர்கொண்டேன் – அதிரடி வீரர் செவாக்

முரளியின் பந்துவீச்சை பயத்துடனேயே எதிர்கொண்டேன் – அதிரடி வீரர் செவாக்

முரளியின் பந்துவீச்சை பயத்துடனேயே எதிர்கொண்டேன் – அதிரடி வீரர் செவாக்

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 11:39 am

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு தாம் மிகவும் பயந்ததாக செவாக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தனது ஓய்வை அறிவித்த போது இதனை செவாக் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான செவாக் அனைத்து பொட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 17,253 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்திய அணி சார்பில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த ஒரேயொரு வீரர் செவாக் என்பது விசேட அம்சமாகும்.

82.23 ஐ ஓட்ட வேகமாகக் கொண்ட செவாக் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அடித்தாடும் பாணியே அலாதியானது. அத்துடன் 2013 அம் ஆண்டிலேயே இவர் இறுதியாக சர்வதேச போட்டிகளில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்