நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் துணை மேயராக இலங்கைத் தமிழ்ப் பெண் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 12:11 pm

நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவின் துணை மேயராக 27 வயது இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் கம்சாயினி குணரட்ணம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நோர்வேயில் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் கட்சியின் ஒஸ்லோ மாநகர கிளை துணைத் தலைவர் மற்றும் இளைஞர் பிரிவு தலைவராக இருக்கும் கம்சாயினி குணரட்ணமும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நோர்வே தொழிலாளர் கட்சியின் இளைஞர் மாநாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இவர் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பிறந்த இவர் தனது 3 ஆவதுவயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாகச் சென்றிருந்தார். தற்போது 27 வயதில் தலைநர் ஒஸ்லோவின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்