நான்காவது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா

நான்காவது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா

நான்காவது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயாராகும் வடகொரியா

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 8:00 am

4-வது முறையாக அணுகுண்டு சோதனைக்கு தயார் ஆகிறது, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா அடுத்தடுத்து 3 முறை அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அந்த நாடு, 4-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயார் ஆகி வருவதாக தெரிய வந்துள்ளது.

வடகொரியாவில் உள்ள நயாங்பயான் அணு வளாகத்தை உளவாளிகள், தொழில்நுட்ப நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி கண்காணித்து வந்ததில், இது தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம், தனது அணு உலைகளை தரம் உயர்த்தி செயல்பாடுகளை தொடங்கி உள்ளதாக வடகொரியா அறிவித்தது நினைவுகூரத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்