சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 8:47 pm

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும், மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்க முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்பொருட்டு அனைத்து மக்கள் மத்தியிலும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு சகல மதத் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரை இன்று முற்பகல் சந்தித்தபோதே இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.

 

12108196_10153601208206327_6739674128796333123_n

10298748_10153601208096327_2764247824091175311_n12108777_10153601208056327_6042667690653243989_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்