சர்வகட்சி சந்திப்பிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – வீ.ஆனந்தசங்கரி

சர்வகட்சி சந்திப்பிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – வீ.ஆனந்தசங்கரி

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 9:06 pm

ஜனாதிபதி தலைமையில் நாளை (22) நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பில் கலந்துகொள்வதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்கின்றபோது அரசாங்கம் பின்பற்றும் நிலைப்பாடு ஏமாற்றமளிப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்