களுத்துறையில் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம்

களுத்துறையில் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

21 Oct, 2015 | 9:59 pm

சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் “எமது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக” விழிப்புணர்வுத் திட்டம் களுத்துறையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளைகளின் மகிழ்சிக்காக எனும் தொனிப் பொருளில் இடம்பெறும் இந்த விழிப்புணர்வுத் திட்டத்திற்கு மக்கள் அமோக ஆதரவினை நல்கி வருகின்றனர்.

சிறி குருச வித்தியாலத்திற்கு அருகில் இன்றைய பேரணி ஆரம்பமானது.

அரச, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பும் இதற்குக் கிடைத்தது.

அதன் பின்னர் களுத்துறையில் பல கிராமங்களுக்கும் சென்று மக்களைத் தெளிவூட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்