கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 8:36 am

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9 ஆவது வகுப்பில் படித்துவந்த அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலாராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார்.

ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிபர் ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில் நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துக்கொள்ள அழைப்புவிடுத்திருந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அகமது முகமது, அதிபர் ஒபாமாவுடன் கை குலுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா குழந்தைகளிடமிருக்கும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கவேண்டும் என தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்