ஐ.நா. அரசியல் விவகார உதவி செயலாளர் நாயகம் இலங்கை வருகை

ஐ.நா. அரசியல் விவகார உதவி செயலாளர் நாயகம் இலங்கை வருகை

ஐ.நா. அரசியல் விவகார உதவி செயலாளர் நாயகம் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2015 | 7:20 am

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் மிரோஸ்லாஃப் ஜென்கா உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் அவரின் விஜயம் இடம்பெறுகின்றது.

மிரோஸ்லாஃப் ஜென்காவின் வருகை இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களை விஸ்தரிப்பதற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள நீண்டகால சமாதானத்தை கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பாகவும் அவர் அறிவிக்கவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் தின வைபவத்திலும் உதவி செயலாளர் நாயகம் கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியும் இலங்கை அதன் அங்கத்துவத்தை பெற்று 60 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இம்முறை ஐநா தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்